வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

CUTE LYRICS BY SOMEONE

காலங்கள் செல்லும் வழி
என் காலோடு நான் செல்கையிலே
வீதி மட்டும் வந்த உன் நட்பு
என் விழியை நனைத்துப் போகையிலே
கால் வலியும் தெரியலையே
கன்னி உந்தன் நினைவினிலே
முகம் சிவக்க சிரித்தநாட்கள்
என் ஆயுள் முழுதும்
என் நெஞ்சினிலே
பழுகும் பொழுதும் படித்த
உன் மனது
பிரியும் பொழுதும்
நெஞ்சம் மறக்கலையே
பாசமென்றோ! நேசமென்றோ!
பல பெயர் சொல்லலாம்
ஆனால் நட்பொன்றே
நம் உறவை அழகாகச்
சொல்லும் வார்த்தை! இல்லை, வாசகம்!
உன் பந்தம் எனக்கு
ரத்த பந்த மின்றி ஒரு
சகோதிரியையே நினைவுப்படுத்துகிறது
சகோதிரியிடமும் நட்பையே நினைவுப்படுத்துகிறது
பழைமை கொண்ட நம் நட்பில்
உரிமையான உணர்வுகள்
சில காலம்
ஊஞ்சலாடியது உலக அனுபவம்
எனக்கு...
நட்பின் வலியை உணர்ந்தேன்...
அந்த வலியும்
நெஞ்சில் சுகமாகவே இருக்கு
காலங்கள் செல்லும் வழி
என் காலோடு நான் செல்கையிலே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

i expect ur valuble comments..